வந்து சென்றோர்!

Wednesday, 6 July 2011

விடியலை நோக்கி...!

என்னை போல் தான் இந்த மலர்களும்...!

அந்தி மாலையில் பசித்திருந்து, விடியற்காலையில் விழித்திருந்து, வெற்றிக்காக தனித்திருந்து..

புது சரித்திரம் படைத்திட..., விடியலை நோக்கி....!

என்னை போல் தான் இந்த மலர்களும்...!!


Saturday, 2 July 2011

பள்ளிப் பருவ நிழலாடல்கள்....

ஈடு இணையற்ற நண்பர்கள்.. எண்ணற்ற கனவுகள்.. எதையும் கண்டு கொள்ளாத மனப்பக்குவம்.. துடிப்பான வாலிபம்.. அரும்பு மீசை காதல்.. பெற்றோருக்கு அடங்காத பாங்கு.. மிதிவண்டிப் பயணங்கள்.. சாலையோர மசால் பொறி.. திருட்டுத் தனமான புகைப்பழக்கம்.. சிறப்பு வகுப்பு என்று ஊர்சுற்றல்.. வெகு நேர கிரிக்கெட்.. தேர்வு நேர காய்ச்சல்.. வஞ்சிப் புகழ்ந்த ஆசிரியர்கள்.. அனுபவித்து பழகிய சற்றே அதிகமான பாட சுமை.. இன்னும் இன்னும் இது போன்ற எண்ணற்ற தடங்களை பெயர்த்தெறிந்து விட்டு இளைஞன் என்ற ஈரச் சுவரை எழுப்பியிருக்கிறோம்.. இதில் இன்னும் எத்தனை சுவடுகள் தடம் பதிக்கப் போகிறதோ!!!

காதல் தோல்வி???

விண்ணுக்கும் இருக்குமோ ஒரு காதல் தோல்வி.., அழுது தீர்க்கிறது....!

முதல் காதல்!

மார்போடணைத்த பஞ்சணை போல் இதம் தருகிறது, என் முதல் காதலின் நினைவுகள்!!

என்னை பாதித்த முதல் கவிதை...!





காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,

நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.
இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.

வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.
ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?

அது,

நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி???

இடை நேர கிறுக்கல்கள்... > மழையினூடே!! ~~~~~


அதிகாலை நேரம்... அறிவிப்பில்லா மின்வெட்டு.. தேடிப் பார்த்தேன், கைக்கெட்டும் தொலைவுகளில்.. தட்டுப்படவில்லை அந்த விசிறி... எழுந்து சென்று தேட ஒரு சோம்பேறித் தனம்...

அந்நேரம், ஜன்னலின் வழி ஒரு சில்லென்ற காற்று... நீலம் படர்ந்த அந்த அதிகாலையில், ஒரு இதம் என்னை எழுப்பியது.... சென்றே விட்டேன் ஜன்னலருகில்... என்ன அருமை... மழையின் தூறல்..., அதனூடே சிறு சாரல்.., அதிகாலை.., சில்லென்ற காற்று.., பனி படர்ந்த இருள்.., அழகு தான்.. பேரழகு தான்.. (தேர்ந்த கவிஞனைப்போல் இவைகளை வரிசைப் படுத்தாவிட்டாலும்)

நன்றி சொன்னேன்.... அந்த மின்வெட்டிற்கு........!