வந்து சென்றோர்!

Saturday, 17 March 2012

Tweeeeets!

திருமணத்தன்றே கெடா வெட்டி பந்தி போடும் புது சம்பிரதாயம் நம் சமூகங்களில் பெருகி வருகிறது.. ஏன்னு கேட்டா, காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்னு ஒரு யூஸ்லெஸ் ஆன்சர் வேற... என்னைப் பொறுத்த வரை, அது இந்துவோ, முஸ்லிமோ, கிருத்துவமோ.. திருமணத்தன்றே பல உயிர்களை பலியிட்டு, புது வாழ்க்கையை துவங்குவதென்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை.. இந்து முறையில், திருமணத்தன்று வீட்டு வாசலில் வாழை மரம் கட்டுவதில் கூட எனக்கு உடன்பாடில்லை... வாழையடி வாழையாய் தழைக்க வேண்டிய திருமண பந்தமும் அதன் தலைமுறைகளும், ஒரு வாழைத்தாயின் மரணத்தில் ஆரம்பமாவதை எவ்வாறு சுபமாக கருதமுடியும்... மாறாக ஒரு மரக்கன்றை நம் வீட்டு முற்றத்திலோ, தோட்டத்திலோ நட்டுவைத்து துவங்கலாம், திருமணமெனும் புனித பந்தத்தை..

சுவரில்லா சித்திரம்!!

சுவரில்லா சித்திரம்,
என்னவளின்
கையசைவில்..!


 

ஆத்ம காதல்!!

அதீத அன்பையும்,
அக்கறையையும்
தாண்டியதோர் வலிமை
சிறு பிரிவிற்க்குண்டு,
'ஆத்ம காதலை' உணர்விக்க..


 

'பொக்கிஷமாய்'!

கிழித்தெறியப்பட
வேண்டிய காதல் கடிதங்கள் பல,
இன்னும் என் இதயப் பெட்டகத்தில்
'பொக்கிஷமாய்'!
 

Tweeeeets!

சுயசுத்தம், நாகரீகம், நாவடக்கம்.. இவையாவும் அற்றவரே நம் பார்வையின் அருவருப்பை சுமக்க தகுதியானவர்கள்... மாறாக திருநங்கைகளும், மாற்றுதிறனாளிகளும், நோய்வாய்ப்பட்ட முதியவர்களுமே இதில் பெரும்பாலும் தண்டிக்கப்படுகிறார்கள்... இறைவனொருவன் இருந்தால், படைப்பில் பிழை செய்தவன் அவனே.. குற்றங்களும் அவனையே சாரும்... பாவமொரு பக்கம்.. பழியொரு பக்கம்..!

Tweeeeets!

சந்தோஷ தருணங்களின் முழுமையான சுவையுணர இரு துளி கண்ணீர் அவசியமாகிறது!!

Wednesday, 7 March 2012

நேரத்தின் மதிப்பு!!

நேரத்தின் மதிப்பை
உணர்ந்தேன்.
மூவாயிரத்து ஐநூறு
விலை பெற்ற கடிகாரத்தில்..


Sunday, 4 March 2012

நிசப்தம்!

அழுத குழந்தையின்
உறக்கத்தில்
உயிர்த்தெழுந்தது
நிசப்தம்..


Friday, 2 March 2012

காதலை மறந்ததேனோ??

ஊண், உடை, உறையுள்..
நான்காவதாய் காதலை
மறந்ததேனோ என் தமிழ்ப் பாட்டனே??


Tweeeeets!

வயதானவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் பார்க்கும் பொழுது ஒருவித இனம்புரியாத பரிவும், பரிதாபமும் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமலே போகிறது.. அதே நேரம் அவர்கள் பொது இடங்களில் மற்றவர்களை தரக்குறைவாக பேசும்பொழுதும், அநாகரிகமாக நடந்துகொள்ளும் பொழுதும் வழக்கத்தைவிட அதிகமான கோபம் வரத்தான் செய்கிறது.. இது அவர்களினால் மதிக்கப்படாத என் பரிதவிப்பினாலா அல்லது காப்பாற்றிக் கொள்ளப்படாத மரியாதையினாலா என்று விளங்கவில்லை..

Thursday, 1 March 2012

Tweeeeets!

அன்பிற்கு இணங்காதவர்களும், சிறு அதட்டலுக்கு இணங்கத்தான் செய்கிறார்கள்!